Print this page

குடி அரசு - துணைத் தலையங்கம் - 08.11.1931. காங்கிரஸ் புரட்டுக்குத் தோல்வி 

Rate this item
(0 votes)

சென்னை நகரசபைக்கு செனட்டிலிருந்து ஒரு பிரதிநிதியைத் தெரிந்தெடுப்பதற்கு தேர்தல் நடைபெற்றது. அதற்குத் திரு.புர்ரா சத்திய நாராயணாவும், இங்கிலாந்திற்கு வட்டமேஜை மகாநாட்டுப் பிரதிநிதியாகச் சென்றிருக்கும் திவான்பகதூர் ஏ.ராமசாமி முதலியாரும் போட்டியிட்டனர். இவர்களில் திரு.ராமசாமி முதலியாருக்கு 109 ஓட்டுகளும் , திரு.சத்திய நாராயணாவுக்கு 46 ஓட்டுகளும் கிடைத்தன. திரு. ராமசாமி முதலியாரே செனட்டின் பிரதிநிதியாக நகரசபைக்கு தெரிந்தெடுக்கப்பட்டார். இந்தியாவுக்கு தானே பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ளும், காங்கிரசைக் சேர்ந்த திரு.சத்தியநாராயணாவுக்கு செனட்டு அங்கத்தினர்களின் ஆதரவில்லா மையைக் கொண்டு படித்தவர்களிடத்தில் காங்கிரசுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறதென்பதைத் தெரிந்து கொள்ளலாம். 'காங்கிரசுக்கு விரோதமான ஜஸ்டிஸ்கட்சி’யைச் சேர்ந்த திரு.ராமசாமி முதலியார் அவர்கள் ஊரில் இல்லாதிருந்தும் வெற்றிபெற்றதைப் பாராட்டுகின்றோம். 

குடி அரசு - துணைத் தலையங்கம் - 08.11.1931

Read 76 times